நேபாள விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

நேபாள விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நேபாள ராணுவத்தினர் இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளனர். 


நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நேபாள ராணுவத்தினர் இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளனர். 

‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 நேபாளி பயணிகள், விமானி உள்ளிட்ட 3 நேபாளி விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்.’

இதையடுத்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு, நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விமானியின் செல்போன் ஜிபிஎஸ் மூலம் விமானம் வடமேற்கு நேபாளத்தில் உள்ள தசாங் பகுதியில் சனோஸ்வெர்பிர் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என அதிகாரிகள் கூறியநிலையில், இதுவரை அடையாளம் காணமுடியாத அளவுக்கு 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த விபத்தில் பெரிய சோகம் என்னவென்றால், நேபாளின் தனுஷாவின் மிதிலாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதில், ராஜன் குமார் கோலே(42), ராஜனின் தந்தை இந்திரா பகதூர் கோல், தாய் ரம்மையா தமாங், மாமா புருஷோத்தம் கோல், அத்தை துளசாதேவி தமாங், மாமா மகர் பகதூர் தமாங் மற்றும் மைஜு சுகுமாயா தமாங் மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்துக்குள்ளானதால் மிதிலா பேரூராட்சி மக்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்கள் வீட்டில் குவிந்துள்ளனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com