இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 விசாக்கள்: பிரிட்டன் பிரதமா் தொடக்கி வைத்தாா்

இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 நுழைவு இசைவு (விசா) வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 விசாக்கள்: பிரிட்டன் பிரதமா் தொடக்கி வைத்தாா்

இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 நுழைவு இசைவு (விசா) வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பதினெட்டு முதல் முப்பது வயது வரையிலான இந்திய பட்டதாரிகள் 2 ஆண்டுகள் தங்கி பணியாற்ற ஆண்டுதோறும் 3,000 விசாக்களை பிரிட்டன் வழங்க உள்ளது. இதேபோல பிரிட்டனைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியாவும் விசா அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது.

இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முறைப்படி நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த புதிய விசா திட்டம் மூலம் பயனடைய உள்ள முதல் நாடாக இந்தியா உள்ளது என்று பிரிட்டன் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களில் நான்கில் ஒரு பகுதியினா் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். பிரிட்டனில் இந்தியா்கள் மேற்கொள்ளும் முதலீடு, அந்நாட்டில் 95,000 வேலைவாய்ப்புகளுக்கு உதவியாக உள்ளது.

இந்நிலையில், இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவு, இரு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான பிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரிட்டனின் உறுதிப்பாடு ஆகியவற்றில் புதிய விசா திட்ட அறிமுகம் குறிப்பிடத்தக்க தருணம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com