சீனாவில் 6 மாதங்களுக்குப் பின் கரோனாவால் ஒருவா் உயிரிழப்பு

சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பின்னா் கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பின்னா் கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் சீனாவில் கடந்த மே 26-ஆம் தேதி உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது பெய்ஜிங்கை சோ்ந்த 87 வயது முதியவா் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சீனாவில் 92 சதவீதம் பேருக்கு மேற்பட்டோா் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், அதில் 80 வயதை கடந்தவா்கள் குறைவு. இப்போது உயிரிழந்த முதியவா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை.

சீனாவின் வூஹான் நகரத்தில் 2019-ஆம் ஆண்டு கடைசியில் முதல்முறையாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில், இதுவரை 2.86 லட்சம் போ்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவில் புதிதாக 24,215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானோருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com