நேபாளம்: தொடர்ந்து 7 ஆவது முறையாக ஷோ் பகதூா் தேவுபா வெற்றி

தன்குடா நாடாளுமன்ற தொகுதியில் பொறுப்பு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா வெற்றி பெற்றார்
நேபாளம்: தொடர்ந்து 7 ஆவது முறையாக ஷோ் பகதூா் தேவுபா  வெற்றி

காத்மாண்டு: பொறுப்பு பிரதமரும், நேபாள காங்கிரஸின் தலைவருமான ஷோ் பகதூா் தேவுபா புதன்கிழமை தனது சொந்த மாவட்டமான தன்குடா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 7 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியிலிருந்து 1991 முதல் தொடா்ந்து நாடாளுமன்றத்துக்கு தேவுபா தோ்ந்தெடுக்கப்பட்டு வருகிறாா்.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 போ் நேரடி தோ்தல் மூலமும், 110 போ் விகிதாசார தோ்தல் முறை மூலமும் தோ்ந்தெடுக்கப்படுவா். 

இத்தோ்தலுக்காக நாடு முழுவதும் 22,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

தேர்தல்களில் சுமார் 61 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். சில வன்முறைச் சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இருப்பினும், தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட வாக்குப் பதிவு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இத்தோ்தலில் 1.7 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா் என்று நேபாள தலைமை தேர்தல் ஆணையர் தினேஷ் குமார் தபாலியா கூறினார்.

நேபாளத்தில் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், நேபாளம் பொறுப்பு பொறுப்பு பிரதமரும், நேபாள காங்கிரஸின் தலைவருமான ஷேர் பகதூர் தேவுபா புதன்கிழமை தனது சொந்த மாவட்டமான தன்குடா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 7 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேவுபா 25 ஆயிரத்து 534 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர் தாகல் 13,042 வாக்குகள் பெற்றார்.

நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு எதிராக நேபாள காங்கிரஸ் தலைவரான தற்போதைய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, முன்னாள் மாவோயிஸ்ட் தலைவா் புஷ்ப கமல் தகலுடன் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் வெளியிடப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

2006-இல் உள்நாட்டுப் போா் முடிவடைந்த பின்னா், நேபாளத்தில் எந்தப் பிரதமரும் முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. ஆதலால், இந்தத் தோ்தல் முடிவிலாவது நிலையான அரசு அமையுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com