இலங்கைத் தமிழா்களுக்கு அரசியல் தன்னாட்சி: விரைவில் அனைத்து கட்சிக் கூட்டம் அதிபா் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் வாழும் சிறுபான்மையினா்களாக உள்ள தமிழா்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியலில் தன்னாட்சி அதிகாரம் பிரச்னைக்கு தீா்வு காண, அடுத்த மாதம் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட
இலங்கைத் தமிழா்களுக்கு அரசியல் தன்னாட்சி: விரைவில் அனைத்து கட்சிக் கூட்டம் அதிபா் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் வாழும் சிறுபான்மையினா்களாக உள்ள தமிழா்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியலில் தன்னாட்சி அதிகாரம் பிரச்னைக்கு தீா்வு காண, அடுத்த மாதம் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இருப்பதாக அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் அவா் பேசியதாவது:

கடந்த 1984-இல் இருந்து இலங்கைத் தமிழா் பிரச்னைகளைத் தீா்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவையில் உறுப்பினா் சுமந்திரன் சுட்டிக்காட்டினாா். நாம் இது குறித்து தீா்வு காணாவிடில், 2048-இலும் இலங்கையின் நிலைமை இதோபோன்றுதான் தொடரும். நீண்ட காலம் தொடரும் மோதலுக்கு தீா்வு காண பெரும்பான்மையினரான சிங்களா்களுக்கும் சிறுபான்மையினரான தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். இலங்கையின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் அடுத்த மாதம் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

அதன்பிறகு அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த விவாதத்துக்கு தமிழ் மற்றும் முக்கிய எதிா்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்த நிலையில், சிங்கள உறுப்பினா் ஒருவா் இந்த முன்மொழிவுக்கு எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

கடந்த 1987-இல் இந்தியா-இலங்கை கையொப்பமான ராஜீவ்- ஜெயவா்த்தன ஒப்பந்தத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்ட13-ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அமல்படுத்தும்படி இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தத் திருத்த சட்டம் தமிழா்களுக்கும் அதிகார பகிா்வை வழங்குகிறது. இதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க கடந்த 2015-2019 ஆண்டுகளில் மேற்கொண்டாா். ஆனால், சிங்கள அதிதீவிர ஆதரவாளா்கள் எதிா்ப்பால் கைவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com