பாகிஸ்தான் ராணுவத்துக்கு புதிய தலைமைத் தளபதி

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவா் ஆசிம் முனீா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு புதிய தலைமைத் தளபதி

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவா் ஆசிம் முனீா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில், அதிசக்திவாய்ந்த அந்தப் பதவிக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் பற்றி பல்வேறு ஊகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான ஆசிம் முனீரை தலைமைத் தளபதி பொறுப்புக்கு நியமிப்பதாக பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை அறிவித்தாா்.

ஏற்கெனவே பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பின் தலைவராக இருந்த ஆசிம் முனீா், சக்திவாய்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக கடந்த 2018-இல் நியமிக்கப்பட்டாா். எனினும், அப்போதைய பிரதமா் இம்ரான் கானின் வற்புறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே அவா் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com