நிலச்சரிவு: கேமரூனில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 14 பேர் பலி

கேமரூனின் தலைநகர் யவுண்டேவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சுமார்14 பேர் இறந்ததாக அப்பகுதியின் ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு: கேமரூனில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 14 பேர் பலி

யாவுண்டே: கேமரூனின் தலைநகர் யவுண்டேவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சுமார் 14 பேர் இறந்ததாக அப்பகுதியின் ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார்.

கேமரூன் தலைநகர் யுவண்டேவில் 20 மீட்டர் உயரமுள்ள மண் அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவுர் இடிந்து அவர்கள் மேல் விழுந்தது.  

இதில், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் குறைந்தது 14 பேர் பலியானதாக அப்பகுதி ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார். 

மீட்புப் படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் புதைந்த சடலங்கள் மீட்கப்பட்டு மத்திய மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், நிலச்சரிவில் சிக்கியுள்ள மற்றவர்களின் அல்லது சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

யவுண்டே ஆப்பிரிக்காவின் ஈரமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் இது செங்குத்தான, குடிசைகள் நிறைந்த மலைகளால் ஆனது. கனமழை காரணமாக இந்த ஆண்டு நாடு முழுவதும் பல பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் அந்த பகுதியின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com