
டிவிட்டரின் தொடக்க கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய எஸ்தர் கிராவ்ஃபோர்டு, பணிமுடித்து அலுவலகத்திலேயே உறங்கும் புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பலர் இந்த புகைப்படத்தை மீம்களாக உருவாக்கி கேலி செய்து வருகின்றனர்.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து டிவிட்டரில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
டிவிட்டரின் தலைமை அலுவலகம் உள்பட ஊழியர்களுக்கு எதிரான செயல்களும் அரங்கேறி வருகின்றன. ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் எலான் மஸ்க் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
டிவிட்டர் உலக அளவிலான நிர்வாகத்தின் துணைத் தலைவராக பணிபுரிந்த கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன் உள்பட பல முக்கியமான நபர்களும் டிவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தனர்.
இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருந்த எஸ்தர் கிராவ்ஃபோர்டு, எலான் மஸ்க் வாங்கிய பிறகும் தற்போது தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இரவு பகலாக பணிபுரிந்து வரும் அவர், டிவிட்டர் அலுவலகத்திலேயே பணிசெய்யும் இடத்தினருகே உறங்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பலர் கேலி செய்தும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், இதற்கு பதிலளிக்கும் வகையில், பதிவிட்டுள்ள எஸ்தர் கிராவ்ஃபோர்டு, டிவிட்டர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது குறித்து எனக்கு நிலையான கருத்துக்கள் உண்டு எனப் பதிவிட்டுள்ளார்.
My timeline all day every day:
— Esther Crawford ✨ (@esthercrawford) November 29, 2022
I HAVE VERY STRONG OPINIONS ABOUT WHAT TWITTER SHOULD AND SHOULD NOT DO pic.twitter.com/ul3Sypi1iG