வெனிசுலா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு, 52 பேர் மாயம்!

வெனிசுலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது நிலையில், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். 
வெனிசுலா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு, 52 பேர் மாயம்!

வெனிசுலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது நிலையில், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். 

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசுலாவின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. 

ஜூலியா புயலால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் வெனிசுலாவின் முக்கிய தொழில்துறை தாழ்வாரத்தில் அமைந்துள்ள 50,000 மக்கள் வசிக்கும் நகரத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 22 பேர் உயிரிழந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது மேலும் உயர்ந்துள்ளது. 

கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 52க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாள்கள் துக்கத்தை அறிவித்துள்ளார். மேலும், தொழில்துறை நகரமான வலென்சியாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லாஸ் தேஜேரியாஸுக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் 11 மாநிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்ததாக அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com