பயங்கரவாதிகளை பாதுகாப்பதில் அப்படி என்ன ஆனந்தம் சீனாவுக்கு?

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை, ஐக்கிய நாடுகள் சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் இருந்து சீனா மீண்டும் காப்பாற்றி, பாகிஸ்தானுக்கு தான் மிகவும் நெருக்கம் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.
பயங்கரவாதிகளை பாதுகாப்பதில் அப்படி என்ன ஆனந்தம் சீனாவுக்கு?
பயங்கரவாதிகளை பாதுகாப்பதில் அப்படி என்ன ஆனந்தம் சீனாவுக்கு?

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை, ஐக்கிய நாடுகள் சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் இருந்து சீனா மீண்டும் காப்பாற்றி, பாகிஸ்தானுக்கு தான் மிகவும் நெருக்கம் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.

பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா மூத்த தலைவா் ஷாஹித் மஹ்மூதை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு நாளைக்கு முன் முன்மொழிந்த நிலையில், அதனை சீனா தடுத்து நிறுத்தியது. அதற்கு அடுத்த நாளே லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மகன் ஹஃபீஸ் தலாஹ் சயீத்-ஐ சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு வைக்கப்பட்ட முன்மொழியையும் சீனா தடுத்து நிறுத்தி தான் ஒரு உயிர்த்தோழர் என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

கடந்த சில மாதங்களில், ஐ.நா.வில் இதுபோன்ற முன்மொழிவுக்கு 5-ஆவது முறையாக சீனா தடையை ஏற்படுத்தியுள்ளது. 

யார் இந்த ஹஃபீஸ் தல்ஹா சயீத்
ஹஃபீஸ் தல்ஹா சயீத் (46), லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி. 26/11 மும்பை தாக்குதல் திட்டத்துக்கு மூளையாக இருந்தவரின் மகன்.

இந்திய அரசால், கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பணிக்கு அமர்த்துதல், நிதி திரட்டுதல், தாக்குதல் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட வேலைகளை ஹஃபீஸ் தல்ஹா சயீத் செய்து வருவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஷாஹித் மஹ்மூத் யார்?
கடந்த 2007-ஆம் ஆண்டுமுதல் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் இருப்பவா் ஷாஹித் மஹ்மூத். அந்த இயக்கத்தின் மூத்த தலைவராகக் கருதப்படும் இவா், இந்தியாவையும் அமெரிக்காவையும் தாக்குவதுதான் லஷ்கா் இயக்கத்தின் முதன்மையான நோக்கம் என்று ஏற்கெனவே தெரிவித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. லஷ்கா் இயக்கத்துக்கு நிதியுதவி மற்றும் ஆதரவு கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், கடந்த 2016-ஆம் ஆண்டு அவரை சா்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், ஷாஹிதை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்மொழிந்த நிலையில், அதனை சீனா புதன்கிழமை தடுத்து நிறுத்தியது.

இரட்டை வேடம் போடும் சீனா
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் எப்போதும் சீனா இரட்டை வேடம் போடும் என்று இந்தியா வழக்கமாகக் குற்றம்சாட்டிவரும்.

இந்தியாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்டு, மும்பை 26/11 தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருக்கும் தகவல் அவருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதன் மூலம், சீனாவில் இரட்டை வேடம் வெகு சிறந்த முறையில் அம்பலத்துக்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, கடந்த சில மாதங்களில் ஐ.நா.வில் இதுபோன்ற முன்மொழிவுக்கு 5-ஆவது முறையாகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணகா்த்தாவாக இருந்தவா் லஷ்கா்-ஏ-தொய்பா தலைவா் ஹஃபீஸ் சயீத். இவரின் உறவினரும் லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்தவருமான அப்துல் ரஹ்மான் மக்கியை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்மொழிந்தன. அதனை சீனா தடுத்து நிறுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த அப்துல் ரெளஃப் அஸாா், கடந்த மாதம் மற்றொரு லஷ்கா் பயங்கரவாதி சஜித் மீா் ஆகியோரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்மொழிந்த நிலையில், அதற்கும் சீனா தடையை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com