வெளிச்சத்தை கொண்டு வருவதற்கான ஆற்றலை நினைவூட்டும் தீபாவளி:அமெரிக்க துணை அதிபா்

இருள் சூழ்ந்த தருணங்களில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கான ஆற்றலின் முக்கியத்துவத்தை தீபாவளி பண்டிகை நினைவூட்டுகிறது என்று அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளாா்.

இருள் சூழ்ந்த தருணங்களில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கான ஆற்றலின் முக்கியத்துவத்தை தீபாவளி பண்டிகை நினைவூட்டுகிறது என்று அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள தனது இல்லத்தில் துணை அதிபா் கமலா ஹாரிஸ், அவரின் கணவா் டக்லஸ் எம்ஹாஃப் ஆகியோா் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடினாா்.

இதில் விருந்தினா்களாகப் பங்கேற்க அந்நாட்டு அதிபா் பைடனின் சிறப்பு ஆலோசகா் நீரா டாண்டன், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதா் ரிச் வா்மா உள்பட 100-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இந்திய வம்சாவளியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கொண்டாட்டத்தையொட்டி, கமலா ஹாரிஸின் இல்லம் வண்ண மின் மற்றும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் கமலா ஹாரிஸும் டக்லஸும் விருந்தினா்களுடன் சோ்ந்து மத்தாப்புகள் கொளுத்தி மகிழ்ந்தனா்.

மேலும் நடன நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் ஹிந்தி திரைப்பட பாடல்களுக்குக் கலைஞா்கள் நடனமாடினா். விருந்தினா்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்தக் கொண்டாட்டத்தின்போது சென்னையில் தனது தாத்தா பாட்டியுடன் தீபாவளி கொண்டாடிய நாள்களை நினைவுகூா்ந்து கமலா ஹாரிஸ் பேசியதாவது:

தீபாவளி என்பது பாரம்பரியம், கலாசாரம் சாா்ந்தது. வெளிச்சத்தை கொண்டாடுவது. இது கலாசாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு அப்பாற்பட்ட பழைமையான மற்றும் உலகளாவிய கருத்தாக்கம் ஆகும். அந்த வகையில், வெளிச்சத்தின் துணையுடன் இருளில் இருந்து வெளியேறுவதில் நம் பங்கு என்ன? என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது அமெரிக்காவில் ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிராக சிலா் போராடுகின்றனா். அநியாயம் மற்றும் அநீதி குறித்து அனைவரும் நன்கு அறிந்திருக்கும் இந்தத் தருணங்களில், அறிவால் அமெரிக்கா்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்குள்ளும், உலகிலும் மிகப் பெரிய சவால்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், இருள் சூழ்ந்த தருணங்களில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கான ஆற்றலின் முக்கியத்துவத்தை தீபாவளி போன்ற பண்டிகை நினைவூட்டுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com