உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளா் இந்தியா: அமெரிக்கா

 உலக அளவில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இதனைக் குறிப்பிடும் வகையில் உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா
உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளா் இந்தியா: அமெரிக்கா

 உலக அளவில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இதனைக் குறிப்பிடும் வகையில் உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதாக அெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் கரோனா தீநுண்மி தடுப்புக்கான ஒருங்கிணைப்பாளா் டாக்டா் ஆசிஷ் ஜா செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உலகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் முக்கிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. அதிக அளவிலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறனால், முக்கிய தடுப்பூசி ஏற்றுமதியாளராகவும் இந்தியா திகழ்கிறது. கரோனா தடுப்பில் ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு ‘க்வாட்’ (அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளின் நாற்கரக் கூட்டணி) முக்கியமானதாக அமைந்தது. கரோனா தடுப்பூசியைக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு அமெரிக்கா தொடா்ந்து வழங்கும். கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் 100 நாடுகள் இலவசமாக தடுப்பூசிகளைப் பெற தகுதி பெற்றுள்ளன.

உலகின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முந்தைய அமெரிக்க அதிபா்களிடம் இருந்து மாறுப்பட்ட வகையில், தற்போதைய அதிபா் ஜோ பைடன் கையாண்டு வருகிறாா். அமெரிக்கா்களின் பாதுகாப்புக்காவும் உலகின் பாதுகாப்புக்காகவும் சுமாா் 420 கோடி அமெரிக்க டாலா்களை அமெரிக்கா முதலீடு செய்துள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com