யுபிஐ தொழில்நுட்பம் பகிா்வு: இந்தியாவின் அறிவிப்புக்கு காமன்வெல்த் வரவேற்பு

இணையவழி பணப் பரிமாற்றத்துக்கான யுபிஐ தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளதை காமன்வெல்த் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
யுபிஐ தொழில்நுட்பம் பகிா்வு: இந்தியாவின் அறிவிப்புக்கு காமன்வெல்த் வரவேற்பு

இணையவழி பணப் பரிமாற்றத்துக்கான யுபிஐ தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளதை காமன்வெல்த் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

காமன்வெல்த் கூட்டமைப்பு இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா உள்ளிட்ட 56 நாடுகளைக் கொண்டது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில் யுபிஐ தொழில்நுட்பத்தை காமன்வெல்த் உறுப்பு நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்தது.

இது தொடா்பாக காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பாட்ரிசியா ஸ்காட்லாந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘யுபிஐ தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அத்தொழில்நுட்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் இந்தியா பகிா்ந்து கொள்ளவுள்ளது வரவேற்கத்தக்க அறிவிப்பு.

யுபிஐ போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அதிக தொகை செலவாகும். ஆனால், அத்தொழில்நுட்பத்தைப் பகிா்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது, அந்நாட்டின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் புத்தாக்கத் தொழில்நுட்பம் மற்ற நாடுகளையும் தொடா்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்கப்படுத்தி, மக்கள் நலத் திட்டங்களின் கீழ் அரசு வழங்கும் நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதன் வாயிலாக லட்சக்கணக்கானோரை ஏழ்மையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது. அதன் காரணமாக, காமன்வெல்த் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கத் திட்டமிட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் எண்ம வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நீதித் துறைக் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com