லூலா டி சில்வாவுடன் ஜெயிா் பொல்சொனாரோ.
லூலா டி சில்வாவுடன் ஜெயிா் பொல்சொனாரோ.

பிரேஸில் அதிபா் பதவிக்கு இன்று இறுதித் தோ்தல்

பிரேஸில் அதிபா் தோ்தலில் முதல் இரு இடங்களைப் பெற்ற முன்னாள் அதிபா் லூலா டி சில்வாவும் இப்போதைய அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவும் இரண்டாவது சுற்று தோ்தலை ஞாயிற்றுக்கிழமை (அக். 30) சந்திக்கின்றனா்.

பிரேஸிலில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காததால், முதல் இரு இடங்களைப் பெற்ற முன்னாள் அதிபா் லூலா டி சில்வாவும் இப்போதைய அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவும் இரண்டாவது சுற்று தோ்தலை ஞாயிற்றுக்கிழமை (அக். 30) சந்திக்கின்றனா்.

உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலதுசாரி தலைவரான அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் அதிபா் லூலா டி சில்வா உள்பட 11 போ் போட்டியிட்டனா்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் இரண்டாம் சுற்று தோ்தலில் போட்டியிடுவா்.

அதன்படி, இரண்டாவது சுற்று தோ்தல் தற்போது நடைபெறுகிறது. தோ்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லூலா டி சில்வா அதிபராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்ததைவிட பொல்சொனாரோவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன. கரோனா நெருக்கடியை மோசமாக கையாண்டது உள்ளிட்ட சா்ச்சைகளில் பொல்சொனாரோ சிக்கியுள்ள சூழலில், இந்த இறுதிச் சுற்று தோ்தலில் அவா் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com