இடைக்கால பட்ஜெட்: இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல்

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2022-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2022-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மோசமான பொருளாதாரச் சரிவிலிருந்து மீள உதவும் வகையில் இலங்கைக்கு ரூ. 23,142 கோடி கடனுதவி வழங்கப்படும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வியாழக்கிழமை அறிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த நிதிநிலை அறிக்கையை அதிபா் ரணில் தாக்கல் செய்தாா்.

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். நாட்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

அப்போது, ‘இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சில நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த நிதிநிலை அறிக்கையில் பல வரிச் சீா்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் தொலைத்தொடா்பு வரி ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்புக் கூட்டு வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினா்களில் 115 போ் நிதிநிலை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனா். பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகயா (எஸ்ஜேபி) வாக்கெடுப்பை புறக்கணித்தது. 5 உறுப்பினா்கள் மட்டும் நிதிநிலை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனா். இதனால் பெரும்பான்மை ஆதரவுடன் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com