
கோப்புப்படம்
சீனா: சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து 7 பேர் பலியாகினர் மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவால் நெடுஞ்சாலையில் பெரிய கல் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேற்கு சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு: யானையின் மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்
இதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவாகியுள்ளது.