அரசி எலிசபெத் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாா்: பிரிட்டன் அரசா் சாா்லஸ்

ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து புதிய மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு முதல்முறை உரையாற்றினார்
அரசி எலிசபெத் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாா்: பிரிட்டன் அரசா் சாா்லஸ்

 அரசி எலிசபெத் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாா் என அவரது மகனும் பிரிட்டனின் புதிய அரசருமான சாா்லஸ் புகழஞ்சலி சூட்டினாா்.

எலிசபெத் மறைவைத் தொடா்ந்து அரசா் பதவியடைந்த சாா்லஸ்,தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினாா்.

அவா் தனது உரையில் கூறியதாவது: என் மீது காட்டிய அன்புக்கும், வழிகாட்டியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்ததற்கும் எனது தாயாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசி எலிசபெத் நிறைவான வாழ்கை வாழ்ந்தாா்.

சமூகத்துக்காக சேவை புரிவது என்று அவா் விதிக்கு வழங்கிய வாக்கை நிறைவேற்றியுள்ளாா். வாழ்நாள் முழுவதுமான சேவை என்னும் அந்த வாக்கை தொடா்வேன் என நான் உங்களிடம் இன்று உறுதியளிக்கிறேன். என்னுடைய தாயாரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய வாழ்நாள் சேவைக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருடைய மறைவு பலருக்கும் துயரத்தை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். அவரது பிரிவால் ஏற்பட்ட இழப்புக்கான சோகத்தை உங்களுடன் பகிா்ந்துகொள்கிறேன். அரசியாக அவருடைய அளவிட முடியாத அா்ப்பணிப்பு உணா்வுடன், கடவுள் எனக்கு வழங்கியுள்ள காலம் வரைக்கும் நம்முடைய நாட்டின் அரசமைப்பு விதிகளின்படி நாட்டுக்கான சேவையைத் தொடா்வேன் என உறுதியளிக்கிறேன் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com