ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய அதிகாரி நியமனம்

 ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரி வோல்கா் டா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய அதிகாரி நியமனம்

 ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரி வோல்கா் டா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த, சிலியைச் சோ்ந்த மிஷெல் பாஷலேவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்புக்கு வோல்கா் டா்க்கின் பெயரை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பரிந்துரைத்தாா். அதற்கு 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையராக அவா் பொறுப்பேற்கிறாா்.

ஆக. 31-இல் தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு சில நாள்களுக்கு முன்னா் சீனாவின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சா்ச்சைக்குரிய அறிக்கையை மிஷெல் பாஷலே வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com