நிலவுக்கு சுற்றுலா.. இல்லை இல்லை சுற்றுலாவுக்காக நிலவே வருகிறது துபைக்கு

துபை, சுற்றுலாவுக்காக நிலவையே வரவழைக்கும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
நிலவுக்கு சுற்றுலா.. இல்லை இல்லை சுற்றுலாவுக்காக நிலவே வருகிறது துபைக்கு
நிலவுக்கு சுற்றுலா.. இல்லை இல்லை சுற்றுலாவுக்காக நிலவே வருகிறது துபைக்கு


நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் பல காலமாக தீட்டப்பட்டு, இன்றும் செயல்வடிவத்துக்கு வராமல் இருக்கிறது. இதனால், துபை, சுற்றுலாவுக்காக நிலவையே வரவழைக்கும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.

மூன் வோர்ல்டு ரிசார்ட் எனும் திட்டத்தின்படி, 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் உண்மையான முழு நிலவைப் போன்ற ஒரு தங்கும் விடுதியைக் கட்டி, அதனைச் சுற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொட்டி, சுற்றுலா மூலம் வரும் வருமானத்தை இரட்டிப்பாக கல்லாக்கட்ட முனைந்திருக்கிறது துபை.

ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த துபை தற்போது சொர்க்கலோகம் போல மாறியிருக்கிறது. இதனை ஒரு படி மேலே உயர்த்தும் வகையில், சுற்றுலாப் பயணிகளைக் கவர, நிலவு காலனியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு, இரவு கேளிக்கை விடுதிகள், ஸ்பா, உணவகங்கள் என அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிரம்பி வழியவிருக்கின்றன.

300 குடியிருப்புகள், திரையரங்குகள் என இதற்கான திட்டங்கள், வடிவமைப்புகள் அனைத்தும் முழுமைபெற்று இடத்தை தேர்வு செய்யும் பணிகள் முடிந்ததும், 48 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வானில் வேடிக்கைக் காட்டும் நிலவு, பூமிக்கு தரையிறங்கி வந்துவிடும்.

இந்த மாதிரி புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. செல்வந்தர்கள் பலரும் நிலவு காலனிக்கு சுற்றுலாச் செல்ல ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com