‘இப்படி ஒரு பாதிப்பைப் பார்த்ததில்லை’: பாகிஸ்தானில் ஐநா பொதுச்செயலாளர் கவலை

இத்தகைய பாதிப்பை இதுவரை சந்தித்ததில்லை என பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றுள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். 
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ்
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ்

இத்தகைய பாதிப்பை இதுவரை சந்தித்ததில்லை என பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றுள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளபாதிப்பால் இதுவரை சுமாா் 1,400 போ் பலியாகியுள்ளனர். மேலும் 12,700 போ் படுகாயமடைந்துள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 

ஏற்கெனவே பொருளாதார சிக்கலில்  தவித்துவரும் பாகிஸ்தானுக்கு தற்போது வெள்ளபாதிப்பும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அட்டோனியோ குட்டேரஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய குட்டேரஸ், “உலகம் முழுவதும் ஏற்பட்ட பல இயற்கை பேரிடர்களைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்பைப் போன்று இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது வருகை பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வளர்ந்த நாடுகள் பின்பற்றத் தவறிய தங்களது கடமைகளாலேயே இத்தகைய பேரிடர்கள் ஏற்படுவதாகவும், பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐநா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், ஜி20 நாடுகளே உலகின் தற்போதைய கார்பன் வெளியீட்டில் 80 சதவிகிதமான உமிழ்விற்கு காரணம் என ஐநா பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com