'நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சைக்காரராகத்தான் பார்க்கிறார்கள்'

தற்போது நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சைக்காரராகத்தான் பார்க்கிறார்கள் என்று, நாட்டின் பொருளாதார நிலையின் இருண்ட படத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப். 
ஷாபாஸ் ஷெரீஃப்
ஷாபாஸ் ஷெரீஃப்


இஸ்லாமாபாத்: தற்போது நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சைக்காரராகத்தான் பார்க்கிறார்கள் என்று, நாட்டின் பொருளாதார நிலையின் இருண்ட படத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப். 

நாம் தற்போது நமது நட்பு நாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நட்பு நாட்டுத் தலைவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்புவிடுத்தாலோ கூட, அவர்கள் நாம் உதவி கேட்கப்போகிறோம் என்று, நம்மை பிச்சைக்காரர்களைப் போலத்தான் நினைக்கிறார்கள் எனறு புதன்கிழமை நடைபெற்ற வழக்குரைஞர்கள் மாநாட்டில் கூறினார் ஷாபாஸ் ஷெரிஃப்.

சிறிய நாடுகள் கூட, பாகிஸ்தானை விஞ்சிவிட்டன, இப்போதெல்ல கடந்த 75 ஆண்டுகளாக நாம் பிச்சைப் பாத்திரத்தை சுமந்துகொண்டுதானிருக்கிறோம்.  வெள்ளம் வருவதற்கு முன்பே பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிக மோசமாகத்தான் இருந்தது. வெள்ளம் அதனை மிகவும் மோசமாக்கியருக்கிறது என்றார்.

பொருளாதார ரீதியாக நெருக்கடியான நிலையில் இருந்த பாகிஸ்தானில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டு, அதனால் 1400 பேர் மரணமடைந்தனர். 3 கோடியே 30 லட்சம் பேர் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com