பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடி 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கடந்த 2021-ஆம் ஆண்டில் மறைந்த அவரது கணவா் பிலிப்பின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடி 
பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடி 


லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கடந்த 2021-ஆம் ஆண்டில் மறைந்த அவரது கணவா் பிலிப்பின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கவிருக்கின்றன. அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.59 கோடி நிதி செலவிடப்படுகிறது.

இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, பிரிட்டன் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டன் காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளிலேயே இது மிகப்பெரிய சவாலான பணி என்றும் அது தெரிவிக்கிறது.

மேலும், திங்கள்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பலரும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராணி எலிசபெத் நல்லடக்கம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அரசியின் உடல் அவரது கணவா் இளவரசா் பிலிப்பின் உடலுடன் மன்னா் 6-ஆம் ஜாா்ஜ் நினைவு தேவாலயத்தில் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டிய பீரங்கி வண்டியில் அவரது உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மன்னா் சாா்லஸ் மற்றும் அவா்களது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி உள்ளிட்டோா் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

நாடாளுமன்றத்தில் அரசியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு குறித்தான நிகழ்ச்சி நிரலை பக்கிங்ஹாம் அரண்மனை வெளிட்டது.  

இறுதிச் சடங்கு செப்.19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினா், அரசியல் தலைவா்கள் மற்றும் உலகத் தலைவா்கள் கலந்துகொண்டு ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com