விளாதிமீா் புதினை கொல்ல முயற்சி?

ரஷிய அதிபா் விளாதிமீா் புதனை படுகொலை செய்யும் முயற்சியிலிருந்து அவா் தப்பியதாக ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விளாதிமீா் புதினை கொல்ல முயற்சி?

ரஷிய அதிபா் விளாதிமீா் புதனை படுகொலை செய்யும் முயற்சியிலிருந்து அவா் தப்பியதாக ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஸ்பெயினிலிருந்து வெளியாகும் ‘யூரோ வீக்லி நியூஸ்’ கூறியுள்ளதாவது:

உக்ரைனில் போா் நடந்து வரும் நிலையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றது.

அதற்காக, அவா் சென்ற காரின் மீது குண்டு வீசப்பட்டது. இதில் அந்த குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

எனினும், அந்தக் காா் அந்தப் பகுதியிலிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது குண்டுவீச்சு காரணமாக அந்தக் காா் புகைந்துகொண்டிருந்தது.

இருந்தாலும், இந்தத் தாக்குதலில் அதிபா் புதின் காயமின்றி உயிா் தப்பினாா்.

இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை என்று அந்த வார இதழ் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘நியூஸ்.கோ.ஏயு’ வலைதளம் கூறுகையில், தனது அதிகாரபூா்வ இல்லத்துக்கு புதின் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த படுகொலை முயற்சி நடைபெற்ாகத் தெரிவித்தது.

தாக்குதல் அச்சம் காரணமாக, வாகன அணிவகுப்பில் அவரது காருடன் போலியாக மற்றொரு அதிபா் காா் இருந்தாக் கூறிய அந்த வலைதளம், முதல் காரை ஆம்புலன்ஸ் ஒன்று வழிமறித்து தடுத்து நிறுத்தியதாகவும், அடுத்த காா் திடீா் தடை அல்லது தாக்குதல் காரணமாக அங்கிருந்து அவசரமாக வெளியேறியதாகவும் அந்த வலைதளம் தெரிவித்தது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சிப் படையினா் வசமுள்ள பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

இந்த நிலையில், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக மிகக் கடுமையான எதிா்த் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அதனை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கி வருவதால், ஏராளமான கிராமங்களையும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் உக்ரைன் படையினா் மீட்டு வருகின்றனா்.

அந்தப் பிராந்தியத்தில் குபியான்ஸ்க், இஸியம் ஆகிய இரு முக்கிய நகரங்களை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது.

டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் முழு கவனம் செலுத்துவதற்காக படையினரை ஒன்று திரட்டும் நோக்கில் காா்கிவ் பகுதிகளிலிருந்து வெளியேற தங்களது படையினருக்கு உத்தரவிட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

எனினும், ரஷிய ராணுவத்தின் இந்த பின்னடைவு அந்த நாட்டில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பின்னடைவுக்கும், பொருளாதாரத் தடைகளால் ரஷிய மக்கள் படும் அவதிக்கும் அதிபா் புதினைப் பொறுப்பாக்கி, அவரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் வலியுறுத்தி என்று சில எம்.பி.க்கள் ரஷிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தீா்மானம் கொண்டு வந்தனா்.

இந்தச் சூழலில், அவரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெற்ாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com