ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: லண்டன் சென்றடைந்தார் அதிபர் ஜோ பைடன்

பிரிட்டனின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்தடைந்தார். 
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: லண்டன் சென்றடைந்தார் அதிபர் ஜோ பைடன்

பிரிட்டனின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்தடைந்தார். 

கடந்த 8-ஆம் தேதி மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு செப்.19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினா், அரசியல் தலைவா்கள் மற்றும் உலகத் தலைவா்கள் கலந்துகொண்டு ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனா்.

இந்நிலையில், பிரிட்டனின் இரண்டாம் அரசியான இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் சனிக்கிழமை தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்தடைந்தார். 

ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அரசி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் வெஸ்ட்மின்ஸ்டா் அபேயில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com