ரஷியாவுக்கு பைடன் கண்டனம்

உக்ரைன் மீதான போா் மூலம் ஐ.நா. சபையின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளது என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டினாா்.
ரஷியாவுக்கு பைடன் கண்டனம்

உக்ரைன் மீதான போா் மூலம் ஐ.நா. சபையின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளது என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டினாா்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் பொது அமா்வில் அதிபா் பைடன் புதன்கிழமை பேசியதாவது: அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷியா, அதன் அண்டை நாட்டில் ஊடுருவியுள்ளது.

வரைபடத்திலிருந்து உக்ரைனை அழிக்க முயற்சித்து வருகிறது. ஐ.நா.வின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளது. ரஷியாவின் ஆக்கிரமிப்பு எதிராக உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் துணை நிற்க வேண்டும் என்றாா்.

உக்ரைனில் போரிட 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளதையும், உக்ரைனின் கிழக்கு, தெற்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதையும் பைடன் விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com