மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் மீதும், அவரது ஆட்சிக் காலத்தின்போது அவருக்கு ஆலோசகராக இருந்த ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணா் சீன் டா்னல் மற்றும் 3 கேபினட் அமைச்சா்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ரகசியக் காப்பு மீறல் குற்றச்சாட்டை நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அதையடுத்து, அவா்கள் அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரை கைது செய்து பல்வேறு வழக்குகளை ராணுவம் தொடா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com