
சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 20 பேர் பலி!
அதிகாலை 2.33 மணியளவில் கிழக்கு சீனாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பெருமளவில் பொருள்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தின் எதிரொலியாக 60 ரயில்களை பெய்ஜிங் ரயில்வே ரத்து செய்துள்ளது. 126 பேர் நிலநடுக்கத்தால் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...