ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலைகள் அதிகரிப்பு

ஜப்பான் நாட்டில், கடந்த ஆண்டு தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலைகள் அதிகரிப்பு


டோக்யோ: ஜப்பான் நாட்டில், கடந்த ஆண்டு தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆண்களின் தற்கொலை விகிதம் கடுமையாக அதிரித்திருப்பதாகவும் அரசு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், 2022ஆம் ஆண்டு ஜப்பானில் 21,584 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 577 சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. அதுபோல, தற்கொலை செய்து கொண்டவர்களில் 14,543 பேர் ஆண்கள். இதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 604 அதிகமாகும்.

கடந்த ஆண்டு 7 ஆயிரம் பெண்கள் தெற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டைக் காட்டிலும் இது குறைவு என்றும் தெரிய வந்துள்ளது.

ஜப்பானில் கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணமாக, அந்நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதகாவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கான சலுகைப் பெறுபவர்கள் 5,347 ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com