'சீட் பெல்ட்' அணியாததால்.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!

காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அபராதம் செலுத்தியுள்ளார். 
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரிஷி சுனக்
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரிஷி சுனக்

காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அபராதம் செலுத்தியுள்ளார். 

சட்டமும் விதிகளும் அனைவருக்கும் பொதுவானது, அதனை யாராக இருந்தாலும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த சம்பவம்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் பேசிக்கொண்டு செல்வதுபோன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது இருக்கையின் பெல்ட்டை அணியாமல் பேசிவருகிறார்.

இந்த விடியோ பலரால் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் பிரதமர் கேமராவை நோக்கி பேசிவருவதாக கருத்துகள் எழுந்தன.

இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், பிரதமர் ரிஷி சுனக் காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாதது தவறான செயல். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரதமர் ரிஷி சுனக் 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் 'சீட் பெல்ட்' அணியாமல் செல்பவர்களுக்கு 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.50,000) அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com