
நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நேபாளம் நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்திலிருந்து நேற்று பிற்பகலில் பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக அந்த பகுதியிலிருந்து பிரதமர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீக்குளித்து நபரை மீட்டு பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிக்க | பிபிசி ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு மாணவர்கள்: மின் நிறுத்தம்; கல்வீச்சு!
தற்கொலைக்கு முயன்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில் தீக்குளித்த நபர், இல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா(வயது 37) எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், பிரதமர் வெளியேறும் நேரத்தில் அவர் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.