மகாத்மா காந்தி நினைவு நாள்: குடியரசுத் தலைவா், பிரதமா் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் ‘தியாகிகள் தினமாக’ திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தியாகிகள் தினத்தையொட்டி புது தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
தியாகிகள் தினத்தையொட்டி புது தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் ‘தியாகிகள் தினமாக’ திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தில்லி ராஜ் காட்டில் உள்ள காந்திஜி நினைவிடத்தில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, 2 நிமிஷம் மெளனம் கடைப்பிடிக்கப்பட்டது. பிராத்தனைகள், காந்திஜிக்கு விருப்பமான பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினா்.

தியாகிகள் தினத்தையொட்டி பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மகாத்மா காந்தி அவா்களின் நினைவு தினத்தில், அவருக்குத் தலை வணங்குகிறேன். நாட்டுக்கான சேவையில் தங்களையே தியாகம் செய்தவா்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களுடைய தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. வளா்ச்சி அடைந்த இந்தியாவுக்காகப் பணியாற்ற அவா்களின் தியாகங்கள் நம்மை பலப்படுத்தும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

பிரிட்டனில் மரியாதை: காந்தியின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு பிரிட்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்தி நினைவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்வில், பிரிட்டனுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமி, எம்.பி.க்கள், இந்திய வம்சாவளியினா் உள்ளிட்டோா் காந்திக்கு மரியாதை செலுத்தினா். பிரிட்டனுக்கான வங்கதேச தூதா் சைதா முனா தஸ்னீமும் இந்நிகழ்வில் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com