
கோப்புப்படம்
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்
மொராக்காவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது.
படிக்க: தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், உதவுவதற்கு இந்தியா எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...