காஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் அமைந்துள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல்.
காஸா
காஸாகோப்புப்படம்

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

இதனிடையே, கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்(ஹமாஸ் படையினர்) கொல்லப்படட்தாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து மீண்டும் அங்கு ஹமாஸ் படையினர் தன்ஞ்சமடைந்த நிலையில், கடந்த மாதம் அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் அதிரடி சோதனை நடத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

அல் ஷிஃபா மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மிகப்பெரிய வெற்றியாக இஸ்ரேல் ராணுவம் கருதுகிறது. மறுபுறம், அல் ஷிஃபா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்ததாக ஐ.நா. சுகாதாரத் துறை முகமை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பல கட்ட தக்குதல்களில் சிதிலமடநிதுள்ள மருத்துவமனை தற்போதைய தாக்குதல்களை தொடர்ந்து, செயல்பட முடியாத நிலையில் பரிதாபமாகக் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளும் தகர்க்கப்பட்டுள்ளதால் அங்கு தஞ்சமடைந்திருந்த பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது,

இதனிடையே, காஸாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேல் மக்களை தாயகம் அழைத்து வர பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இஸ்ரேலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக நடைபெறும் பேச்சுவாா்த்தையில் ஹமாஸுடன் சமரச ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com