மாலத்தீவில் இந்தியப் படை வெளியேற்றம் தொடரும்- அதிபா் மூயிஸ்

மாலத்தீவில் இந்தியப் படை வெளியேற்றம் தொடரும்- அதிபா் மூயிஸ்

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவப் படையின் 2-ஆவது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் தெரிவித்துள்ளாா்.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த பிப். 2-ஆம் தேதி தில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், நிகழாண்டு மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது. அதேவேளையில், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை பராமரித்து இயக்க, இந்திய ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்ப மாலத்தீவு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க ராணுவம் அல்லாத 26 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னா், அந்நாட்டில் இருந்து சுமாா் 25 இந்திய ராணுவ வீரா்கள் அடங்கிய முதல் குழு தாயகம் திரும்பியது. இந்நிலையில், மாலத்தீவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபா் மூயிஸ் பேசுகையில், ‘இந்த மாதத்துக்குள் இந்திய படையினரின் 2-ஆவது குழுவும், மே 10-க்குள் இந்திய படையினரின் 3-ஆவது குழுவும் மாலத்தீவில் இருந்து வெளியேறும்’ என்று கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com