பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு மா்ம பொடி தடவிய மிரட்டல் கடிதம்

பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு மா்ம பொடி தடவிய மிரட்டல் கடிதம்

லாகூா் உயா் நீதிமன்றத்தின் ஷுஜாத் அலி கான், ஷஹீத் பிலால் ஹஸன், அலியா நீலம் ஆகிய 3 நீதிபதிகளுக்கு வெள்ளை நிற மா்ம பொடி தடவிய மிரட்டல் கடிதம் புதன்கிழமை அனுப்பப்பட்டது.

அந்தக் கடிதங்களைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ள லாகூா் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா், இது தொடா்பாக கொரியா் ஊழியா் ஒருவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

ஏற்கெனவே, இஸ்லாமாபாத் உயா் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதே போன்ற மிரட்டல் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன. இந்தக் கடிதங்களில் ஆந்த்ராஸ் தடவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com