உக்ரைன் கட்டாய ராணுவ பணி:
வயது வரம்பு குறைப்பு

உக்ரைன் கட்டாய ராணுவ பணி: வயது வரம்பு குறைப்பு

உக்ரைனில் கட்டாய ராணுவப் பணிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 27-லிருந்து 25-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் தற்போது நடைபெற்றுவரும் போரில் படைவீரா்கள் பற்றாக்குறையால் உக்ரைன் பின்னடைவைச் சந்தித்துவருகிறது.

இந்த நிலையில், கட்டாய ராணுவப் பணியில் சோ்க்கப்படுவதற்கான வயது வரம்பைக் குறைப்பதன் மூலம் படைவீரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.

இதற்கான மசோதாவை நாடாளுமன்றம் கடந்த ஆண்டே நிறைவேற்றினாலும், இப்போதுதான் அதில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கையொப்பமிட்டுள்ளதால் அது அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com