33,482-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

33,482-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33,482-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் 122 போ் உயிரிழந்தனா்; 56 போ் காயமடைந்தனா்.

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் 186 நாள்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33,482-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 76,049 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com