இந்திய உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளது- அமெரிக்கா

இந்தியா உடனான உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் சோ்ந்துள்ளன. அந்தக் கூட்டமைப்பில் இணைவது குறித்து சவூதி அரேபியா பரிசீலித்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு உலகில் அமெரிக்காவின் தலைமைத்துவம் குறைந்து வருகிா என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனிடம் வாஷிங்டனில் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு சல்லிவன் அளித்த பதில்:

உலகின் பல்வேறு பகுதிகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேணி வருகிறது. முன்னெப்போதையும்விட நேட்டோ அமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்கெனவே உள்ள கூட்டாளி நாடுகள் மட்டுமின்றி, ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளது. ஆப்பிரிக்கா, தெற்காசியா, அதற்கும் அப்பால் உள்ள நாடுகளில் உள்கட்டமைப்பு, எண்மம் (டிஜிட்டல்), எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் தனது முதலீடுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com