காஸாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் படைத் தலைவரின் 3 மகன்கள் பலி

காஸாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் படைத் தலைவரின் 3 மகன்கள் பலி
காஸாவில் உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் உறவினர்கள்
காஸாவில் உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் உறவினர்கள்படம் | ஏபி

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் படைத் தலைவரின் 3 மகன்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவரது 3 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக காஸா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரம்ஜான் பண்டிகையையொட்டி, காஸாவில் போரில் பலியான தங்களது உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று பாலஸ்தீனர்கள் அஞ்சலி செலுத்தினர். காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 33,482 பேர் கொல்லபட்டுள்ளனர். காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் 122 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com