இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தியதால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, நிராகரிக்கவும் இல்லை. இதனையடுத்து, ஈரானிலிருந்து இன்று அதிகாலை (ஏப். 14) நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இஸ்ரேலை குறிவைத்து அனுப்பப்பட்டன.

எனினும், ஈரானிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன்களை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராக் மற்றும் யேமனிலிருந்தும் இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் வான்வழித் தாக்குதலை அடுத்து இஸ்ரேலில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா. பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வரும் விமான சேவைகளை நிறுத்த விமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. மேலும், இஸ்ரேல் வான்வழிப் பாதை வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை மாறுப்பாதையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com