இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

ஈரானின் வான்வழித் தாக்குதலால் இஸ்ரேல் அதிர்ச்சி!
இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!
TOMER NEUBERG

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தியதால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஹமாஸ் படை மீது குறிவைத்து பாலஸ்தீன மக்கள் வாழும் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்துள்ளது. இந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் சண்டையை தொடங்கியுள்ளது. சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, நிராகரிக்கவும் இல்லை. இதனையடுத்து, ஈரானிலிருந்து இன்று அதிகாலை (ஏப். 14) நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இஸ்ரேலை குறிவைத்து அனுப்பப்பட்டன.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்கும் விதமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த சண்டையில் அமெரிக்கா தலையிடக் கூடாதென ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்படம் | ஏபி

எனினும், ஈரானிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன்களை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராக் மற்றும் யேமனிலிருந்தும் இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com