ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!
ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!
படம் | ஏபி

இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டதற்கு ஐ.நா., உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சிரியாவில் உள்ள தங்களின் துணைத் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி வந்த ஈரான், பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

ஏற்கெனவே, ஹமாஸ்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையே உண்டாகியுள்ள மோதல் உலகின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா்ச் சூழலை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ந்டவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் மீது ஈரானும், ஈரான் மீது இஸ்ரேலும் பரஸ்பர குற்றஞ்சாட்டியுள்ளன. இவ்விரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com