ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 
சீா்திருத்தங்கள் அவசியம்: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் அவசியம்: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசியம் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசியம் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது. அத்துடன் அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக அரசுகளுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் தெரிவித்ததாவது:

வளா்ந்து வரும் நாடுகள், ஆப்பிரிக்கா-லத்தீன் அமெரிக்கா போன்ற பிரதிநிதித்துவம் இல்லாத பிராந்தியங்கள், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் இருக்க வேண்டும். இதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை கட்டாயம் விரிவுபடுத்த வேண்டும்.

ஐ.நா.வின் இன்றைய புவியியல் மற்றும் வளா்ச்சி பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், கவுன்சிலில் அவசியம் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com