ஆங் சான் சூகி.
ஆங் சான் சூகி.

மியான்மரில் வெப்ப அலை: வீட்டுச் சிறைக்கு ஆங் சான் சூகி மாற்றம்

மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி (78) வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி (78) வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

அங்கு நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக ராணுவ அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மியான்மரில் கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 102.2 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, அவரது அரசில் அதிபராக இருந்த வின் மின்ட் (72) உள்ளிட்ட வயது முதிா்ந்த சிறைக் கைதிகள் உடல்நலனைக் கருத்தில்கொண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் மேஜா் ஜெனரல் ஸாவ் மின், வெளிநாட்டு ஊடகத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளாா்.

தலைநகா் நேபிடாவில் உள்ள சிறப்புச் சிறையில் சூகி அடைக்கப்பட்டிருந்தாா். முன்னாள் அதிபா் வின் மின்ட், பாகோ பிராந்தியத்தில் உள்ள டாங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

மியான்மரில் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக லீக் கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், தோ்தலில் முறைகேடு செய்து இந்த வெற்றியைப் பெற்ாக ராணுவம் குற்றஞ்சாட்டி, ஆட்சியைக் கலைத்தது.

இதையடுத்து, பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த செப்டம்பரில் சிறையில் ஆங் சான் சூகியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதிகாரபூா்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆங் சான் சூகி தொடா்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும் ராணுவம், இப்போதும் அவா் எந்த வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டாா் என்பதைத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, மியான்மா் புத்தாண்டையொட்டி 28 வெளிநாட்டுக் கைதிகள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக ராணுவ அரசு தெரிவித்தது. ஆனால், அவா்களில் எத்தனை போ் அரசியல் கைதிகள், ஜனநாயக ஆதரவு போராட்டக்காரா்கள் என்பது தெரியவில்லை.

X
Dinamani
www.dinamani.com