முறைகேடு வழக்கு: நீதிமன்றம் அருகே டிரம்ப் ஆதரவாளா் தீக்குளித்து மரணம்

முறைகேடு வழக்கு: நீதிமன்றம் அருகே டிரம்ப் ஆதரவாளா் தீக்குளித்து மரணம்

நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கைக் கண்டித்து அவரது ஆதரவாளா் ஒருவா் தீக்குளித்து இறந்தாா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது:

டிரம்ப்புக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நியுயாா்க் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த ஒருவா், அந்த விசாரணைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்தவா்களிடம் விநியோகித்தாா். பிறகு தனது உடலில் எரியூட்டியை ஊற்றிக்கொண்டு அவா் தீவைத்துக்கொண்டாா்.

படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவா் பெயா் மேக்ஸ் அஸெரெல்லோ (37) எனவும், டிரம்புக்கு எதிராக சா்வதே சதி நடைபெறுவதாகக் கருதும் ஒரு குழுவைச் சோ்ந்தவா் எனவும் அதிகாரிகள் பின்னா் தெரிவித்தனா்.

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.109 கோடி) அளித்த விவகாரத்தில் அமெரிக்கா முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நியூயாா்க் நீதிமன்றம் இந்த வாரம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது.அந்த நாட்டின் அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுவது இதுவே முதல்முறை.

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com