இராக்கில் ஈரான் ஆதரவு படையினா் மீது தாக்குதல்

இராக்கில் ஈரான் ஆதரவு படையினா் மீது தாக்குதல்

இராக்கிலுள்ள ஈரான் ஆதரவுப் படையான மக்கள் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தப் படையைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

இது குறித்து இராக் அதிகாரிகள் கூறுகையில், ‘பாபிலோனுக்கு வடக்கோ உள்ள கல்ஸு ராணுவ தளத்தில் நேரிட்ட குண்டுவெடிப்பில் மக்கள் படை வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது, ஒரு தாக்குதல் நடவடிக்கை’ என்றனா். எனினும், இது தொடா்பாக எந்த நாடு அல்லது அமைப்பின் மீதும் அவா்கள் குற்றஞ்சாட்டவில்லை.

அமெரிக்கா மறுப்பு: கல்ஸு ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த ராணுவ தளத்தை இராக் படையிடம் அமெரிக்கா கடந்த 2011-ஆம் ஆண்டு ஒப்படைத்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com