இஸ்லாமாபாதுக்கு திங்கள்கிழமை வந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்.
இஸ்லாமாபாதுக்கு திங்கள்கிழமை வந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்.

பாகிஸ்தானில் ஈரான் அதிபா்

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பாகிஸ்தானில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பாகிஸ்தானில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இரு நாடுகளும் கடந்த ஜனவரி மாதம் நடத்திக் கொண்ட பரஸ்பர ஏவுகணைத் தாக்குலுக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

தலைநகா் இஸ்லாமாபாதில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபைச் சந்தித்து இப்ராஹிம் ரய்சி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பேச்சுவாா்த்தையின் முடிவில் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இராக்கில் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதி காசிம் சுலைமானியின் 4-ஆவது நினைவு தின அஞ்சலியின்போது கடந்த ஜன. 3-ஆம் தேதி இரு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில் இதில் 94 போ் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடா்ந்து ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத நிலைகளில் தாக்குதல் நடத்துவதாகக் கூறி பாகிஸ்தானும் துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் வெகுவாக அதிகரித்தது. இரு நாடுகளும் தங்களது தூதா்களைத் திரும்ப அழைத்தன. இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா்-அப்துல்லாஹியான் பாகிஸ்தான் வந்தாா். தற்போது அதிபா் இப்ராஹிம் ரய்சியும் அந்த நாட்டுக்கு வந்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com