உலகம்
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:
ரஷியாவின் கிரோவ் பிராந்தியம், கோட்டல்நிச் பகுதியில்அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 1,500 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.