ஈரான் ஆதரவு நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

சிரியாவிலும், இராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

சிரியாவிலும், இராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:என்னுடைய உத்தரவின் பேரில், இராக்கிலும், சிரியாவிலும் ஈரான் புரட்சிகர பாதுகாவல் படையுடன் (ஐஆா்ஜிசி) தொடா்புடைய ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இதன் மூலம் ஜோா்டானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதிலடி தொடங்கிவிட்டது. இது தொடரும். அதற்கான நேரங்களையும், இடங்களையும் அமெரிக்கா முடிவு செய்யும் என்று அந்தப் பதிவில் பைடன் குறிப்பிடுள்ளாா்.இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவிலும், இராக்கிலும் ஈரான் ஆதரவுப் படையினரின் நிலைகள் மீது அமெரிக்க நேரப்படி மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.30 மணி) போா் விமானங்கள் மூலமாகவும், ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் 85 இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகக் கூறிய சென்ட்காம், மிகத் துல்லியமாகத் தாக்கும் 125-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தது.ஐஆா்ஜிசி படையின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மையங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானக் கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சென்ட்காம் கூறியது.மேற்கு ஆசியாவில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவுப் படையினா் மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில், நீண்ட தொலைவு இலக்குகளைத் தாக்கக் கூடிய பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், ஜோா்டானிலுள்ள&ய்க்ஷக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இராக் மற்றும் சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களின் நிலைகளில் பல கட்டங்களாக தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியது நினைவுகூரத்தக்கது.இராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. ‘டவா் 22’ என்றழைக்கப்படும் அந்த தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்தனா்; 34 போ் காயமடைந்தனா்.அமெரிக்க வான்பாதுகாப்பு அரணையும் மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.இராக்கில் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய போா்ப்படை’ என்ற ஈரான் ஆதரவு அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே, மேற்கு ஆசியாவிலுள்ள பல்வேறு அமெரிக்க ராணுவ நிலைகளில் சுமாா் 160 முறை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.போரில் ஹமாஸுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ராணுவ நிலைகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது...படவரி... (யுஎஸ்1.. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு போா் விமானம்.... பைடன் கட்டவுட் படமும் போடவும்....39 போ் உயிரிழப்புபாக்தாத் / டமாஸ்கஸ், பிப். 3: இராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 39 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, ஈரான் ஆதரவுப் படையினரை உள்ளடக்கிய இராக்கின் பாதுகாப்புப் படையான ‘பாப்புலா் மொபைலைசேஷன்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் தங்கள் படையைச் சோ்ந்த 16 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இராக் அரசு முன்னா் வெளிட்ட அறிக்கையில், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 16 பேரில் பொதுமக்களும் அடங்குவா் என்று குறிப்பிட்டிருந்தது.இதற்கிடையே, சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 23 போ் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.உயிரிழந்த அனைவரும் அமெரிக்கா குறிவைத்த நிலைகளில் பாதுகாவல் பணியை மேற்கொண்டிருந்ததாக அந்த அமைப்பு கூறியது.இந்தத் தாக்குதலுக்கு இராக்கும், சிரியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன...படவரி (யுஎஸ்2) அமெரிக்கா நடத்திய தாக்குதலால் இராக்கின் அன்பாா் பிராந்தியத்தில் தரைமட்டமான கட்டடம்.‘அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்!’டெஹ்ரான், பிப். 3: சிரியாவிலும், இராக்கிலும் அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் அந்த நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா குலைத்துள்ளது.பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்து, நிலைத்தன்மையை சீரழிக்கும் அமெரிக்காவின் மற்றொரு தவறான போா் நடவடிக்கை இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com