சிலி: காட்டுத் தீயில் சிக்கி 46 போ் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 46 போ் உயிரிழந்தனா்.
சிலி: காட்டுத் தீயில் சிக்கி 46 போ் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 46 போ் உயிரிழந்தனா். மக்கள் அடா்த்தி மிகுந்த நாட்டின் மத்திய பகுதியில் தீ ஏற்பட்டதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காட்டுத் தீயால் 1,100 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயை அணைக்க தீயணைப்புப் படையினா் தீவிரமாகப் போராடி வருகின்றனா்.

இது தொடா்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அந்நாட்டு அதிபா் கேபிரியல் போரிஸ், ‘வல்பராய்சோ பிராந்தியத்தில் 4 இடங்களில் மிகத்தீவிரமான காட்டுத் தீ பரவியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். நாட்டு மக்கள் அனைவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இருப்பிடத்தைவிட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தினால் உடனடியாக அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில், தீ மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. கோடைகாலத்துடன் காற்றும் சோ்ந்துள்ளதால் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது’ என்றாா்.

கடந்த சனிக்கிழமை சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 92 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com